கணனி அமைப்பில் கோளாறு! விமான நிலையத்தில் நீள் வரிசையில் பயணிகள்!


கணனி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பண்டார நாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் இயந்திரமல்லா மனிதவலு முறைமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கருமபீடத்தில் பெரும் வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கோளாறு சீர்செய்யப்படும் வரை இந்த முறைமை நடைமுறையில் இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments