180 போர் விமானங்களை விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா180 போர் விமானங்களை பறக்க விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா.

இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை (உள்ளூர் நேரப்படி) சுமார் 180 வட கொரிய இராணுவ விமானங்களை கண்டறிந்தோம் தென்கொரியா இராணுவம் கூறியது.

தென் கொரிய இராணுவம் மேலும் 3 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதையும் கண்டறிந்து உள்ளது. ஏவுகணை ஒன்று தென் கொரியாவின் கடல் பகுதிக்கு அருகில் தரையிறங்கியது. கொரிய எல்லையில் ஏற்கனவே கொந்தளிப்பான சூழ்நிலைக்கு மத்தியில் இது மேலும் பதட்டத்தை அதிகரித்து உள்ளது.

தென் கொரிய பாதுகாப்பு மந்திரி லீ ஜாங்-சுப், பிற பிராந்திய நட்பு நாடுகளுக்கு எதிராக எந்த வகையான அணு ஆயுதத்தையும் பயன்படுத்தினாலும் கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று எச்சரித்தார்.

No comments