ஏரல் எடுக்க சென்ற இளைஞன் கடல் இழுத்துச் சென்றது!

முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்க சென்ற இளைஞன் கடல் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் 20.11.22 இன்று காலை இடம்பெற்றுள்ளது.05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 அகவையுடைய செ.நிசாந்தன் என்ற இளைஞனே கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் கடல் சீற்றம் காரணமாக உடலம் இதுவரை  கிடைக்கவில்லை.

செய்தி: ஜெகதீஸ்வரன் டிஷாந்த் 

No comments