கத்தாரில் உலகக்கோப்பை ஆரம்பம்: முதல் போட்டியில் ஈக்வடோர் 2-0 கோல் கணக்கில் வென்றது!


கத்தார் அல் பேட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 67,372 இரசிகர்கள் முன்னிலையில்உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி ஆரம்பமாகியது. 

ஈக்வடோர் - கத்தார் நாடுகள் முதல் களத்தில் போட்டியிட்டன. விளையாட்டின் முடிவில் 2-0 கோல் கணக்கில் ஈக்வடோர் வெற்றிபெற்றது.

ஈக்வடார் கேப்டன் என்னர் வலென்சியா முதல் பாதியில் இரண்டு கோல்களையும் அடித்தார்.

ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் முன்னிலையில், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உட்பட சக்திவாய்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்ட வண்ணமயமான 30 நிமிட தொடக்க விழாவிற்குப் பிறகு இந்த போட்டி ஆரம்பமானது.

2022 ஆண்டு உலகக்கோப்பையை நடத்துவதற்கு நடத்தப்பட்ட மூடப்பட்ட வாக்கெடுப்பில் வாக்காளர்களுக்கு கத்தார் கையூட்டு வழங்கியமை மற்றும் மனித உரிமைகள் சர்ச்சைகளில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.No comments