இனி விடுதலை இல்லை:முருங்கை மரத்தில் ரணில்!கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார். 

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எதிர்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே இலங்கை ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என குறிப்பிட்ட இலங்கை ஜனாதிபதி, அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியுமெனவும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments