24 மணி நேரத்தில் 23,060 மரக் கன்றுகளை நட்டு சாதனை படைத்த இளைஞன்


கனடாவைச் சேர்ந்த 23 வயதான மாரத்தான் வீரரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான அன்டோயின் மோசஸ் (Antoine Moses) 24 மணி நேரத்திற்குள் 23,060 மரக் கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார். இச்சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறார். 

COP 27 உச்சிமாநாட்டில் உலகளாவிய தலைவர்கள் சந்தித்து, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகின் போராட்டத்தில் புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த மரநடுகைச் சம்பவம் வைரலாகியுள்ளது.

நோர்வேயின் முன்னாள் தூதர் எரிக் சோல்ஹெய்ம் ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் மோசஸ் தொடர்ந்து குனிந்து குழி தோண்டி ஒரு நொடியில் மரக்கன்றுகளை நடுவதைக் காணலாம். 

கடந்த 6 ஆண்டுகளாக மோசஸ் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டி மரங்களை நட்டு வருகிறார். 

இதற்கு முன்னர் 24 மணி நேரத்தில் 15,000 மரக்கன்றுகளை நட்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த நிலையில் இந்த சாதனை மோசஸால் கடந்த ஆண்டு முறியடிக்கப்பட்டது.

காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பெரும் வெள்ளம், புயல், அதீத மழையினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் ஆர்டிக், அண்டார்டிக்கா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.


No comments