பெல்ஜியத்தில் கத்திக்குத்தில் காவல்துறை உறுப்பினர் பலி!! மற்றொருவர் காயம்!!


பெல்ஜியம் தலைநகர் பிரசில்சின் ஷர்க்பீக் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு காவல்துறையினர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது.

கத்தியுடன் வந்த நபர் காவல்துறையினர் பணியிலிருந்த காவல்துறை உறுப்பினரின் கழுத்தில் கத்தியால் குத்தியதால் அந்த காவல்துறை உறுப்பினர் அந்த இடத்தில் உயிரிழந்தார். மற்றொரு காவல்துறை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை அக்காவல்துறை உறுப்பினர் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தாக்குதலாளி மீது சுட்டார் இதில் அவர் காயமடைந்தார்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான ஒரு காவல்துறை உறப்பினர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மற்ற காவல்துறை உறுப்பினருக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதல் நடத்திய நபரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியபோது 'கடவுளே சிறந்தவன்' என்று அரேபிய மொழியில் கூறுக்கொண்டு அந்த நபர் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கத்திக்குத்து சம்பவம் பயரவாத தாக்குதல் என பெல்ஜியம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments