பகிடிவதை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம்! பல்கலைக்கழக மாணவர்களுக்கான பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றவியல் சட்ட நடைமுறைகளுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், பகிடிவதை தொடர்பில் காவல்நிலையங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள், விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments