ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை


வடகொரியா இன்று ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது.  

காலை 17 ஏவுகணைகள் நண்பகல் 6 ஏவுகணைகள் என மொத்தம் 23 ஏவுகணைகளை ஏவி வடகொரியா மிரட்டியுள்ளது.  

மேலும், 100-க்கும் மேற்பட்ட ஆட்டிலறி பீரங்கி குண்டுகளை பதற்றம் நிறைந்த கிழக்கு கடற்பகுதியில் வீசிய வடகொரியா சோதனை நடத்தியதாக தெரிகொரியா தெரிவித்துள்ளது.  

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதேபகுதியில் தென்கொரியாவும் ஏவுகணைகளை ஏவி பதிலடி கொடுத்துள்ளது.  

இரு நாடு அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதால்கொரிய  தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

No comments