கோப்27 மாநாட்டைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்!!


எகிப்தில் நடைபெறும் COP27 மாநாட்டில் கூடியிருக்கும் நாடுகளின் அரசாங்கங்களின் செயலற்ற தன்மையையும் அந்த மாநட்டுக்கான விளம்பரதாரர்களைக் கண்டிப்பதாக ஸ்பெயனில் செயற்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.

ஸ்பெயினின் பார்சிலோனாப் பகுதியில் அமைந்துள்ள எகிப்திய அருங்காட்சியத்தில் மம்மி மற்றும் புராதன சிற்பங்கள் அமைந்த கண்ணாடிப் பெட்டிகள் மீது கொக்கோ கோலா போத்தலில் நிரப்பிய போலியான இரத்தைத்தையும் போலியான எண்ணெய்யையும் ஊற்றி தங்கள் எதிர்ப்பை பதிவிட்டனர்.

பின்னர் அவர்கள் "COPCA COLA" என்ற பெரிய பதாகையைத் தாங்கிப் பிடித்தனர்.

பல சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகை மாசுபடுத்துவதாக கருதும் நடவடிக்கைகளுக்காக குளிர்பான நிறுவனங்கள் பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துவதை விமர்சிக்கின்றன.

No comments