பெண்களை பாலியல் பண்டங்களாக விற்பனையா? மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் சில பெண்களுக்கு பாதுகாப்பான பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் விபசார வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களினால் இலங்கைப் பெண்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முதலாளிகளுடன் பாதுகாப்பான உடலுறவை எவ்வாறு பேணுவது? அவர்களின் உடலை சரியாக மசாஜ் செய்வது எப்படி? அந்த முதலாளிகளை எப்படி பாலியல் ரீதியாக மகிழ்விப்பது? என இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஓமான், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் பாலியல் தூண்டுதல் மாத்திரைகள் மற்றும் கருத்தடை உறைகள் குறித்து சம்பந்தப்பட்ட பயிற்சியின் போது விளக்கமளிக்கப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதை வெளிப்படுத்திய விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments