கந்தகாடு மீண்டும் உடைப்பு! 50 பேர் தப்பியோட்டம்!

கொரோனா பெருந்தொற்றின் பின்னராக இரண்டாவது தடவையாக பொலனறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.

எனினும் பி;னனர்;, 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments