தூரசேவை நிலையத்திற்கு விடிவு காலம்!யாழ்.நகரில் நாளை முதல் தூர சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் புதிதாக அமைக்கப்பட்ட தூர சேவைக்கான பேருந்து நிலையத்திலிருந்து  சேவையில் ஈடுபடும் என யாழ்ப்பாணம் மாவட்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்துஉரிமையாளர்  சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி சஜிந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து விதமான தனியார் பேருந்துகள் சிற்றூர்திகளும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தூர சேவைக்கான பேருந்து நிலையத்திலிருந்து நாளை காலை முதல் சேவையில் ஈடுபடுவதென யாழ் மாநகர முதல்வர் தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து சிற்றூர்தி மற்றும் தனியார் பேருந்துகளும்  நாளை காலை முதல் தூர சேவைக்கான பேருந்து நிலையத்திலிருந்து  சேவையினை செயற்படுத்தவுள்ளோம் என்பதை பொதுமக்களுக்கு வினயமாக தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்தார் .

No comments