அவுஸ்திரேலியாவிலும் கொடி கட்டி பறக்கும் இலங்கை மானம்!

 20-20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது அவர் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க காயம் காரணமாக பல நாட்களாக அணியில் இருந்து விலகிய போதிலும், அவரை இலங்கைக்கு அனுப்ப இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எவ்வாறாயினும், உலகக்கிண்ணத்தில் இருந்து விலகிய இலங்கை அணி இன்று காலை இலங்கை வரவுள்ளது.

தனுஷ்க குணதிலக்க இந்த ஆண்டு உலகக் கோப்பையில் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரே வீரர் என்பதும் இந்த ஆண்டு உலகக் கோப்பையின் சாதனையாகும்.

உலகக் கிண்ணம் தொடர்பான இலங்கையின் தீம் பாடல் ‘கம்மக் தமாய்’ என உருவாக்கப்பட்டுள்ளது.

No comments