கடலில் கைதான சிறுவனை விடுவிக்க கோரிக்கை!
இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களில் சிறுநீரகம் பாதித்த 14 வயதுச் சிறுவனை உடனே மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என இராமேஸ்வரம் மீனவ விசைப்படகு சங்கத் தலைவர் யேசுராயா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் இராமேஸ்வரம் மீனவர்கள் 05ஆம் திகதி மாலை 3 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட 966 இலக்கப் படகில் பயணித்த மீனவர்களில் அந்தோணி இராயப்பன் என்கின்ற மீனவரும. தொழிலிற்குச் சென்றிருந்தார். இவ்வாறு சென்ற மீனவர் தன்னுடைய 14 வயது சிறுவனையும் அழைத்துச் சென்றார்.
ஏனெனில் இம்ரோன் ராயின்சன் என்னும் சிறுவன் 2009அன்றே பிறந்தவர் என்பதோடு அவர் ஓர் சிறுநீரகப் பாதிப்பிற்கு இலக்கான சிறுவன் அதனால் அவர் தொடர்பில் தாயார் பெரிதும் அஞ்சுகின்றார்.
எனவே இலங்கை கடற்படையினர், மீன்பிடித் துறையினர், உள்ளூர் அதிகாரிகள் அனைவரும் உடன் மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு தந்தையையும் மகனையும் நடுக்கடலில் வைத்து ஒப்படைத்து மனிதாபி மானத்தை வெளிப்படுத்துங்கள். பின்னர் ஓர் உச்ச கட்ட சுகயீனத்தின் பின்பு சட்ட இடையூறுகளை குறிப்பிடுவதில் பயன் இல்லை எனவே உடனடியாகவே அந்தச் சிறுவனை சிறுவன் என்ற காரணத்திற்கும் அப்பால் ஓர் நோயாளி என்ற மனிதாபிமானத்தை கருத்தில்கொண்டு இதனை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
Post a Comment