கிளிநொச்சியில் போராட்டம்!கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினுள்; புகுந்து வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடாத்தியுள்ளன.

கிளிநொச்சியில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள திறன் விருத்தி வளாகத்தில் இன்று காலை ஆரம்பமானது. 

நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த சேவை, இரண்டவது நாளாக இன்று கிளிநொச்சியில் நடைபெறுகின்றது. 

மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று நடைபெறும் நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் குமாரி, இழப்பீடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.எம்.ஹசீம் உள்ளிட்டவர்கள் பங்கெடுத்திருந்தனர்.


No comments