தலைவர் தவறான புரிதலுடன் பேசுகிறார்?கடல் அட்டை பண்ணை தொடர்பில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா, தவறான புரிதலுடன் பேசுகிறார் என்றும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயற்படுகிறார் என்றும் கிளிநொச்சி - கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் தம்பிப்பிள்ளை மகேந்திரன், உறுப்பினர் பாலசிங்கம் லிங்கேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று  நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிற்கு குறித்த சங்கத்தை சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வருகை தந்திருந்தனர். அத்தோடு, தாம் உட்பட 150 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் சுமார் இரண்டு ஏக்கர் அளவில் கடல் அட்டை பண்ணை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments