கோப்பாய் ஊரெழு முருகன் கோவில் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி கைது!!


கோப்பாய் - ஊரெழு முருகன் கோயில் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த 25 வயதுடைய ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிரபல போதைப்பொருள் வியாபாரி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


No comments