கொழும்பில் 10 மணி நேர நீர் வெட்டு!!


கொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 02, 03, 04, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments