நிதியமைச்சர் அதிரடியாக நீக்கம்! புதிய நிதியமைச்சர் நியமனம்!!


பிரித்தானியாவில் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை பிரதமர் லிஸ் டிரஸ் வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். மேலும், புதிய நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் என்பவரை நியமித்துள்ளார். 

No comments