உக்ரைனுக்கு மேலும் 725 மில்லியன் டாலர் நிதி உதவி


உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 725 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் உறுதியளித்தார். ஏற்கனவே, கடந்த வாரம் அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 625 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments