முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் உலக உணவுத்திட்ட இணைப்பாளருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான அரச இணைப்பாளர் முஸ்தப்பா நியமத்க்கும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க..விமலநாதனுக்கும்

இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகம் ஒற்றை நிறுவுதல் தொடர்பாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் உலக உணவுத்திட்டத்தின் நிவாரண செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான களஞ்சிய நிர்வாக அதிகாரி தம்மிக்க மற்றும் ஆலோசகர் முகாஸ் முதலியோர் கலந்து கொண்டனர்.

ஜெடி

No comments