வேலை நிறுத்தத்தால் முடங்கியது ஜெனீவாவின் லெமன் எக்ஸ்பிரஸ் தொடருந்து சேவைகள்!!


பிரான்சில் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதானல் பொதுப் போக்குவரத்துகள் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் தாக்கம் சுவிஸ் நாட்டிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுவிஸ் பிரதேசத்தில் தொடருந்துகள் வழமை போன்று சாதாரணமாக இயங்கும். அதேவேளை சுவிஸ் - பிரான்சில் எல்லைப்பகுதியில் தொடருந்து சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜெனீவாவுக்கு நாளாந்தம் வேலைகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) முதல் லெமன் எக்ஸ்பிரஸின் பிரெஞ்சு பிரதேசத்தில் தொடருந்துப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்று நிறுவனம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

சுவிஸ் பிரதேசத்தில், லெமன் எக்ஸ்பிரஸ் தொடருந்து சேவைகள் அன்னேமாஸ்ஸே (Annemasse) வரை கால அட்டவணையின்படி இயங்கும்.

குறிப்பாக, ஐந்து வழித்தடங்களில் போக்குவரத்து தடைபடும் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழித்தடம் 1 : ஈவியன் (Evian) - ஜெனிவா - காப்பெட் (Geneva – Coppet)

வழித்தடம் 2 : அன்னேசி (Annecy) - ஜெனீவா - கோபட் (Geneva – Coppet)

வழித்தடம் 3 : செயின்ட் கெர்வைஸ் (St. Gervais) - ஜெனிவா - காப்பெட் (Geneva – Coppet)

வழித்தடம் 4 : அன்னேமாஸ்ஸே (Annemasse ) - ஜெனீவா - காப்பெட் Geneva – Coppet

வழித்தடம் 5 : பெலகார்டே (Bellegarde) - ஜெனீவா (Geneva)

சுவிஸ் ஃபெடரல் இரயில்வே (SBB) மற்றும் பிரான்சின் SNCF ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புடன், லெமன் எக்ஸ்பிரஸ் என்பது 230-கிமீ நீளமுள்ள 40 ரயில்களின் நெட்வொர்க் ஆகும்.

இது சுவிஸ் மாகாணங்களான ஜெனிவா மற்றும் வாட் மற்றும் பிரெஞ்சு துறைகளான ஐன் மற்றும் ஹாட்-சவோயி ஆகியவற்றுக்கு இடையே 45 நிலையங்களை உள்ளடக்கியது.

சுவிஸ் மற்றும் பிரெஞ்சு நகரங்களுக்கு இடையிலான TGV இணைப்புகள் போன்ற பிற எல்லை தாண்டிய சேவைகளும் பாதிக்கப்படும் என்று சுவிஸ் ஃபெடரல் ரயில்வே (SBB) தெரிவித்துள்ளது.

No comments