ரஷ்யாவின் இன்றை தாக்குதலையடுத்து தனது குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்து!


உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதை அடுத்து அமொிக்கக் குடிமக்களை உக்ரைனை விட்டு பாதுகாப்பாக வெளியேறுமாறும், நிலக்கீழ் அறைகளில் தங்குமாறும் கீவ்வில் உள்ள அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்கள் பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது என்று தூதரகம் ட்வீட் செய்தது.

தூதரகம் அமெரிக்க குடிமக்களை அந்த இடத்தில் தஞ்சமடையச் செய்து உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறது.

No comments