தென்கொரியாவில் ஹாலோவீன் கூட்ட நெரிசலில் குறைந்தது 149 பேர் பலி!!


தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஒரு குறுகிய தெருவில் திரண்டிருந்த சனக் கூட்டத்தின் நெரிசலில் குறைந்தது 149 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்வர்களில் பெரும்பாலும் 20 வயதுடைய பெண்கள் மற்றும் இளைஞர்கள் எனத் தெரிய வருகிறது. 

இந்த சம்பவம் இரவு 10:20 மணியளவில் (13:20GMT) ஹாமில்டன் ஹோட்டலுக்கு அருகில் உள்ள ஒரு குறுகிய சந்துக்குள் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியதை அடுத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டது.No comments