கட்டாய ஓய்வு வயது 60: அமைச்சரவை அனுமதி!!


அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், ஜனவரி 2023 முதல் அரச துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமைக்கும் சுற்றறிக்கையை வெளியிடவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட  இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தில்  முன்மொழியப்பட்டபடி, அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக மாற்றியமைக்கப்படவுள்ளது.

No comments