டிரோன் சத்தம் செவிமடுப்பு: பாதுகாப்பு உதவிக்கு அழைப்பு விடுத்தது நோர்வே


நோர்வேயின் வட கலுக்கு மேலாக கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத ஆளில்லா விமானத்தின் (டிரோன்) சந்தம் செவிமடுப்பதாகவும், நோர்வே எடுக்கும் எரிவாயுவை சுத்திகரிக்கும் நிலையங்களை ரஷ்யா குறி வைக்கப்படலாம் என்ற அச்சம் நோர்வேயைக் கவலையடையைச் செய்துள்ளது.

ஐரோப்பாவின் இயற்கை எரிவாயுவுக்கு முக்கிய ஆதாரமாக ரஷ்யா மற்றும் நோர்வே மாற்றியமைத்துள்ள நிலையில், ஆளில்லா விமானத்தின் பறப்பு மொஸ்கோவின் செயல் என்று இராணுவ வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.

உளவு, நாசவேலை மற்றும் மிரட்டல் ஆகியவை ட்ரோன் விமானங்களுக்கான சாத்தியமான நோக்கங்களாக அவை பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆளில்லா விமானத்தின் அச்சுறுத்தல் காரணமாக போர்க் கப்பல்கள், கடலோர காவல்படைக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை ரோந்து நடவடிக்கைகாக நோர்வே அனுப்பியுள்ளது. 

அத்துடன் நோர்வேயின் தேசிய காவலர்கள் கரையோர சுத்திகரிப்பு நிலையங்களைச் சுற்றி பாதுகாப்புக்காக நிறுத்தியுள்ளது.

இப்பிரச்சினையைத் தீர்க்க நேட்டோவின் உறுப்பு நாடுகளான பிரான்ஸ், யேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை உதவுமாறும் கடற்படையை அனுப்பி வைக்குமாறும் நோர்வேயின் பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் அடைப்பு விடுத்துள்ளார்.

No comments