கிரிமியாவிலிருந்து ரஷ்யாவுக்கு உதவுகிறது ஈரானியப் படைகள்
ரஷ்யாவிற்கு ஆதரவாக ஈரான் படைகள் கிரிமியாவில் இருப்பதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில்:
உக்ரைனுக்கு எதிராக ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ஏவுவதில் ரஷ்ய படைகளுக்கு உதவுவதற்காக, 2014 ஆண்டு ரஷ்யாவால் சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவிற்கு குறைந்த அளவு தனது படைகளை ஈரான் அனுப்பி உள்ளது.
ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர். ஆனால் டிரோன்களை ரஷ்ய படைகள் தான் இயக்குகின்றனர் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
உக்ரைனுக்கு எதிராக ஏவுவதற்காக ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷ்யா வாங்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
Post a Comment