யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த மதிப்பளிப்பு விழா

யாழில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் ஞாபகர்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா

இடம்பெற்றிருந்தது.

தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் வகையில் தீபம் ஏற்றி, அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டு இந்நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டிருந்தது .

இதன்போது போட்டிகளில் பங்குபற்றிய சிறார்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கஜேந்திர குமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பெற்றோர், சிறுவர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். (க)

No comments