மயக்கத்தில் யாழ்ப்பாணம்?ஹெரோயின் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டனர் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக போதைப் போருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 22 பேர் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.

 அழைத்து வரப்பட்ட 22 பேரையும் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி இவர்களில் 19 பேர் அதிக போதைப் பொருளிற்கு அடிமையாகியுள்ளமையுடன், அது உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளாகவும் காணப்படுவதோடு அதனை ஊசி மூலம் ஏற்றிய அதிக தடயங்களும் காணப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 22 இளைஞர்களும் 17 வயது முதல் 31 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவே காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது 

No comments