ரணிலுக்கு பச்சைக்கொடி :சுமந்திரன் காண்பித்தார்!புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வினை, ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை  வரவேற்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், ரணிலின் முயற்சிக்கு முன்னர் பங்களித்ததை போலவே முழுமையான பங்களிப்பை வழங்குவோம் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரணிலுடன் முரண்பட்ட போக்கை கொண்டிருந்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது நல்லாட்சி காலப்போக்கில் நட்புறவை பேண முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments