மாவிட்டபுர அபிஷேக கந்தன் தேவஸ்தானத்தின் கந்தசஷ்டி உற்சவம்
வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுர அபிஷேக கந்தன் தேவஸ்தானத்தின் கந்தசஷ்டி உற்சவம் இன்று காலை பக்திபூர்வாக இடம்பெற்றது.
இவ் கந்தசஷ்டி உற்சவம் இன்று காலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான முருகன் ஆலயங்களிலும் மிக சிறப்பாக விரத உற்சவ அபிஷேக ஆராதனைகளுடன் இடம்பெற்றன.
இவ் உற்சவகிரியையினை ஆலயபிரதம குரு ஸ்ரீ இரத்தினசபாதிக்குருக்கள் நடாத்திவைத்தார்.
இதில் பல இடங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றனர்.
இன்று ஆரம்பித்துள்ள கந்தசஷ்டி விரதம் ஆறு நாளாக காணப்படுகின்றது இவ்விரதம் எதிர்வரும் 31.10.2022 அன்று இனிதே சூரசம்காரத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment