உக்ரைன் போரை முடிவுக்குள் கொண்டுவாருங்கள் புடினிடம் போப் வேண்டுகோள்


உக்ரைன் மீதான போரை முடிவிற்கு கொண்டு வருமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

வாடிகனில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பொது மக்களிடையே பேசிய போது, உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரணச்சூழலை நிறுத்த வேண்டும் என புடினை கேட்டுக் கொண்டார்.

அமைதியை ஏற்படுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, திறந்த மனதுடன் சமாதானத்திற்கு முயற்சிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ், பயங்கரமான இந்த போரை முடிவிற்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் அனைத்து முன் முயற்சிகளையும் எடுக்க  வேண்டும் என வலியுறுத்தினார். 

No comments