இரவல் சேலையில் இது நல்ல கொய்யகமாம்!இரவல் சேலையில் இது நல்ல கொய்யகமாம் என்பது அரச படைகளிற்கும் பொருந்தியிருக்கின்றது.

வெளிநாட்டிலிருந்து புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட  உதவியை கொண்டு யாழ் மாவட்ட பாதுகாப்பு படை கட்டளை தளபதியால் சங்கானையில் பெண்தலைமைத்துவ குடும்பமொன்றிற்கு இன்று காலை  கையளிக்கப்பட்டது .

புலம்பெயர்தேசத்தை சேரந்த வின்சன் சின்னதுரையின் தாயார் ஜெசி சின்னத்துரையின் நினைவாக அவருடைய  நிதிபங்களிப்பில் யாழ் மாவட்ட 513 வது படைப்பிரிவினரால் சங்கானை பகுதயில்  தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு படைப்பிரிவினரின் மனித வலுவோடு கட்டப்பட்ட வீடே இன்றைய தினம் யாழ் மாவட்ட பாதுகாப்பு படை கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.சி .எஸ்.பி விஜயசுந்தர தலைமையில் பயனாளியிடம் கையளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இலங்கை படைகளது புதிய தரகராக உருமாற்றம் பெற்றிருக்கின்ற மோகன் எனும் நபரால் உருவாக்கப்பட்ட பிரச்சாரத்தை வழமை போலவே முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments