யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கும்பல் தாக்குதல்!!


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக  நேற்றைய தினம் சென்று கொண்டிருந்த 4 பல்கலைக்கழக மாணவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை வழி மறித்து தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments