யாழ்ப்பாணம் வருகை தந்த ரணிலின் பாரியார்!
இலங்கை நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment