மறுக்கிறார் அமைச்சர்!



நாமல் படையணியினர் யால காட்டில் நடத்திய சாதனை பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே  சில தினங்களுக்கு முன்னர் யால தேசிய பூங்காவிற்குள் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டிச் சென்ற உறுப்பினர்களில் தனது மகனும் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை வன ஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர மறுத்துள்ளார்.

“கடந்த பத்து நாட்களாக எனது மகன் கொழும்பில் மிகவும் அதிகமாக இருந்தான், அவன் மத்துகமவில் உள்ள எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு மாத்திரமே சென்றிருந்தான்” என அமைச்சர் தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், யால தேசிய பூங்காவில் 32 ஜீப் வண்டிகள் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

கிடைத்த தகவலின்படி, வேக வரம்பு விதிகளை மீறி இவர்கள் அதிவேகமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“வீடியோ காட்சிகள் கிடைத்த நிலையில், நான் வெளிநாட்டில் இருந்தேன், நான் முதலில் ஐஜிபியிடம் பேசி, சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது அவர்களின் நிலையை கருத்திற்க் கொள்ளாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன்.

பின்னர், அமைச்சின் செயலாளரிடம் பேசினேன். வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடிய பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் என்றேன்.

பின்னர் எனது மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது தனிப்பட்ட சாரதியுடன் அவரது வெளியூர் பயணத்தை உறுதிப்படுத்தினேன். கடந்த பத்து நாட்களாக அவர் கொழும்பில் இருந்து வெளியில் எங்கும் செல்லவில்லை எனவும் அவர் அங்கு செல்லவில்லை எனவும் அறிந்துகொண்டேன்.

விசாரணைகள் தொடங்கியவுடன், 32 வாகனங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு, வாகனப் பதிவுகள் குறித்து நான் மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் விசாரித்தேன். ஏழு ஜீப்கள் வனவிலங்கு திணைக்களத்திடம் சரணடைந்தன. நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. ஒன்பது சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்,” என்றும் அமைச்சர் கூறினார்.தெரிவித்தார்.

யால தேசிய பூங்காவிற்குள் 916 நபர்கள் உட்பட மொத்தம் 164 ஜீப் வண்டிகள் அன்றைய தினம் பிரவேசித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments