பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கூட ஆபாசப் படங்களைப் பார்கிறார் - போப் பிரான்சிஸ்


பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கூட ஆன்லைனில் ஆபாசப்படங்களைப் பார்க்கிறார்கள் என்று போப் கூறியுள்ளார்.

வத்திக்கானில் தொடுதிறன்பேசி அதாவது மொபைல் போன் தொடர்பில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆபாசப் படங்களை உலகில் பல கோடி மக்கள் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் கூட ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

பல சாமானியர்கள், சாதாரண பெண்கள், அவ்வளவு ஏன் பாதிரியார்களுக்கும் கூட இது ஒரு தீமையாகவே உள்ளது. நான் சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் கிரிமினல் ஆபாசப் படங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. மைனர்களை பயன்படுத்தும் ஆபாசப் படங்கள் ஏற்கனவே சட்டப்படி தவறு என்றார்.

அது ஆன்மாவைப் பலவீனப்படுத்துகிறது. பிசாசு அங்கிருந்து நுழைகிறது. ஆசாரிய இதயத்தை பலவீனப்படுத்துகிறது என்றார்.

No comments