டுவிட்டர் தலைமையத்திற்கு சிங்குடன் நுழைந்த எலான் மக்ஸ்

எலோன் மஸ்க் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்திற்குள் ஒரு கை கழுவும் சிங் ஒன்றைச் சுமந்து செல்லும் காணொளியை ட்விட்டரில்

வெளியிட்டார். அத்துடன் ட்விட்டரின் தலைமை அதிகாரி என அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை, 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க உள்ளார் எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார்.


இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்குவதாக அறிவித்தார். பின்னர் சில வாரங்களிலேயே அம்முடிவில் இருந்து பின் வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலன் மஸ்க் நாளை வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டொலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

இதன்மூலம், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, "அதை முழுமையாக புரிந்து கொள்ளட்டும்" என்று 'சிங்க்' மூலம் பதிவிட்டுள்ளார்.


No comments