வடகொரியாவுக்கு பதிலடி: சொந்த ஏவுகணை தென்கொரிய விமானத்தளத்திலேயே விழுந்தது!


வடகொரியாவுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. அதேவேளை, தென்கொரிய ராணுவமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.

இதில், தென்கொரியா ஏவிய ஒரு ஏவுகணை தோல்வியடைந்தது. அந்த ஏவுகணை வடகொரியாவின் கடற்கரை நகரமான கங்க்னியங் என்ற பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்தது. விமாப்படை தளத்தில் ஏவுகணை விழுந்து வெடித்தது.

ஏவுகணை விழுந்து வெடித்ததில் விமானப்படை தளத்தில் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா நடத்திய ஏவுகணை சோதனை சொந்தநாட்டு விமானப்படை தளத்திற்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments