அரச வைத்தியசாலைகளில் மருந்துகளே இல்லை?



இலங்கையில் தற்போது, பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில் 90இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித அலுத்கே, நாட்டில் உள்ள வைத்தியசாலை வலையமைப்பு பற்றாக்குறை காரணமாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர எல்லையில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகள் போன்ற வைத்தியசாலைகள் கூட மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பெராசிட்டமோல், பிரிட்டன், சேலைன் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளும் பற்றாக்குறையாக காணப்படுகிறது. வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் எஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் கொழும்பு பொது வைத்தியசாலையில் கூட பற்றாக்குறையாக உள்ளன.

அறுவை சிகிச்சை செய்யும் போது பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்குள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, நோயாளிகள் மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும் தற்போது மருந்தங்களிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே நோயாளிகள் வாங்க முடியாத அளவுக்கு மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு, மருந்துகளை வாங்க முயலும் நோயாளிகளுக்கு சிம்மசொப்பனமாக மாறியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை போன்ற ஆய்வகங்களில் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


No comments