கொழும்பு பிரதான வீதி விபத்தில் 40 பேர் காயம்!கொழும்பு பிரதான வீதியின் மாவனெல்லை – உத்துவான்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments