கிணற்றுள் தவறி விழுந்தமையே காரணம்!


 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள்  நேற்றைய தினம் (24) இரவு மீட்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிணற்றுக்கட்டில் விளையாடிய 24 வயதுடைய இரு இளைஞர்களே கிணற்றுக்குள் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம்  வடமராட்சி புலோலி சிங்கநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,குறித்த பகுதியில் சில இளைஞர்கள் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்த போது, ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.  அவரை காப்பாற்ற அடுத்த இளைஞரும் கிணற்றில் குதித்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த ஏனைய இளைஞர்களால் ஊரவர்களை உதவிக்காக அழைத்து கிணற்றில் இருந்தவர்களை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் பற்றி பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments