வாட்ஸ்அப் செயலிழந்துள்ளது!


இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்அப் செயலிழந்துள்ளது.

 கடந்த சில மணி நேரமாக வட்ஸ்-அப் செயலி சரியாக இயங்கவில்லை என ஏனைய சமூக வலைத் தள பாவனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .

 தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒருமணி நேரமாக உலகமெங்கும் இயங்காததால் தகவல் பரிமாற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

whatsapp செயலியின் மத்திய பரிமாற்ற கட்டமைப்பில் (server-side) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையே இதற்கு காரணம் என மெட்டாவின் பேச்சாளர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த பாதிப்பை சரிசெய்து whatsapp மீளமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்


No comments