யாழில் இம்முறையும் காந்தி ஜெயந்தி!யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், யாழ் மாநகர பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர், அரசியல் சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், மற்றும் அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது காந்தீயம் ஏடு யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசனால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

மேலும் மகாத்மா கந்திக்கு மிகவும் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடலும் மாணவர்களினால் இசைக்கப்பட்டது.No comments