பக்தர்கள் உளவூர்தி குளத்தினுள் கவிழ்ந்தது: 26 பேர் பலி!


வட இந்தியாவின் கான்பூர் நகரத்தில் கட்டாம்பூரில் இந்து பக்தர்ககளை ஏற்றிச் உளவூர்தி  குளத்தில் கவிழ்ந்து விழுந்த 26 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

கான்பூரின் காவல் கண்காணிப்பாளர் தேஜ் ஸ்வரூப் சிங் கூறுகையில்:-

நேற்று சனிக்கிழமை இரவு அருகில் உள்ள இந்து கோவிலில் நடந்த விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த சுமார் 40 பேரை அந்த உளவூர்தி ஏற்றிச் சென்றது. பெரும்பாலான மரணங்கள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து தென்மேற்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கான்பூரில் நடந்த விபத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

No comments