காணாமல் போனவர் சடலமாக மீட்பு!


மட்டக்களப்பு, புதூர் பிரதேசத்தில் 5 நாட்களுக்கு முன்னர் காணாமற்போயிருந்த இளைஞன்,  அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதூர் 5ம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல்கள் அடுத்து தடவியல் பிரிவு காவல்துறையுடன் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, ​​கடந்த மாதம் 27 ஆம் திகதி செவ்வாய்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய காணாமல் போன இளைஞனே 5 தினங்களின் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதணைக்காக நீதிமன்ற அனுமதியைப் பெற்று வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு  காவல்துறைஅதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments