மாலதிக்கு நினைவேந்தல்:இந்திய துணைதூதரும்!

புலிக்கு வாலையும் இந்தியாவிற்கு தலையினையும் காண்பிப்பதில் தமிழ் அரசியல்வாதிகளிற்கு நிகர் வேறு யாருமேயில்லை.

கிட்டு பூங்காவில் இந்திய துணைதூதரை அழைத்து வந்து கார்த்திகை பூ அணிவித்து அழகு பார்த்தார் முன்னாள் வடமாகாண அமைச்சர் ஒருவர்.

தற்போது இன்னொரு படி மேலே சென்று முதல் பெண் மாவீரர் மாலதி நினைவேந்தல் தினத்தன்று இந்திய துணைதூதரை தருவித்து மாலை அணிவித்து அழகு பார்த்திருக்கின்றது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அன் கோ.

இன்றைய நாள் இந்திய விரிவாதிக்க இராணுவத்துடன் மோதி இறந்த தேசிய வீரர் மாலதியின் நினைவுநாள்.  இதனை மடைமாற்றும் நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் இந்த நிகழ்வு ஒழுங்கு படுத்தப்பட்டது போல தெரிகின்றதென்கிறார் மூத்த போராளியொருவர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்ற பண்பாட்டுக் கலைவிழாவின் பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத் தூதரக கவுன்சில் ஜெனரல் ராகேஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்; சிறீதரன் என கலகலத்திருந்தது கிளிநொச்சி.

எனினும் வழமை போலவே மாலதி நினைவேந்தலை தான் முன்னெடுத்துள்ளோமென கம்பி கட்டுவதில் மும்முரமாகியிருக்கின்றது சிறீதரன் அன் கோ.

இந்திய இராணுவத்திற்கெதிரான போரில் கோப்பாய் தரவையில் முதல் பெண்போராளி மாலதி வீரச்சாவினை தழுவிக்கொண்ட நாள் இன்றாகும்.


No comments