கள்ளு வேணுமாம் கொலையாளி அமைச்சருக்கு!


யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனம்கள்ளை பெறுவதற்கான வழிவகைகள் தனக்கு கிடைக்கவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை நகைச்சுவையாக தெரிவித்தார்.

மது போதையில் அனுராதபுர சிறைச்சாலைக்கு கைதுப்பாக்கி சகிதம் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றவாளி இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தனது சகபாடிகளிடம் அமைச்சர் கள் கேட்டமை செய்தியாகியுள்ளது.


No comments