சரத்பொன்சேகாவிற்கு வந்தது ரத்தமே தான்!யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு இராணுவ நலன்களிற்கு தேவையென வாதிட்டு வந்த முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி சரத்பொனசேகா உயர்பாதுகாப்பு வலயத்திற்கு எஎதிராக பொராட களமிறங்கியுள்ளார்.

 கொழும்பு நகரில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆகியோர் உச்ச நீதிமன்றில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன (ஓய்வு), பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும் ஒன்றுகூடுவதற்கும் உள்ள உரிமை அடிப்படை உரிமையாகும், இது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் பல சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ், ஐரோப்பிய ஒன்றியத்தால் சாதகமான வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.


“இந்த மரபுகளை மீறுவது, இலங்கைக்கு எதிராக ஏற்கனவே தீர்மானம் கொண்டு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.


உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) பிரிவு 19, 21 மற்றும் 22 ஐ மீறுவதாகவும், இது சர்வதேச மன்றங்களில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


உயர் பாதுகாப்பு வலய ஆணை செல்லுபடியற்றது என்றும் அரசியலமைப்பின் 12(1), 14(1)(a) மற்றும் 14(1)(b) ஆகியவற்றின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அறிவிக்குமாறு மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.


சட்டத்தரணி சம்பத் விஜேவர்தன ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

No comments